நாமக்கல்: நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை: மீண்டும் பயன்பாட்டுக்கு வரப்போகும் மருத்துவ மையம்
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப் பணிகள் தொடங்கி உள்ளன. சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில், 60 நாட்களுக்குள் பணிகள் முடிந்து, 24 மணிநேர அவசர சிகிச்சை வசதிகளுடன் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.