உத்தமபாளையம்: தேனி: சொந்த சேமிப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாகக் கொண்டாடிய சிறுவர்கள்!
தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கியதோடு, ஊர்வலமாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் சிலைகளைக் கரைத்தனர்.