அரியலூர்: 774 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி கரு.பொய்யூர் மையத்தில் குழந்தைகளை நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கினார்.