பண்ருட்டி: தங்கர் பச்சான் தான் இந்த தொகுதியின் மாப்பிள்ளை;பண்ருட்டி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பண்ருட்டி பேருந்து நிலையம் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது பேசிய அவர் அரசியலில் வெற்றி தோல்வி முக்கியமில்லை எனவும் கொள்கைதான் முக்கியம் எனக் கூறிய அவர் தங்கர் பச்சான் தான் இந்தத் தேர்தலில் உங்கள் தொகுதியின் மாப்பிள்ளை எனவும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் மண்டபம் மாறி வந்து விட்டதாக கேலியாக பேசினார்