திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனைக்கு எடுத்து வரப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் இன்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர்,அப்போது சந்தேகப்படும் படியாக இருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவர் 10.5 கிலோ கிராம் கஞ்சா கடத்தி வந்த கர்நாடகா மாநிலம் கொடகு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்