திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை
திண்டுக்கல் நகர் மற்றும் பாலகிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, நாகல்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 8 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.