அரியலூர்: வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்
அரியலூர் மாவட்டத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சி.பழனி ஆய்வு செய்தார். மேலும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளையும் அவர் ஆய்வு செய்தார்.