கோவை வடக்கு: கோவை: பதிவெண் இல்லாமல் வலம் வரும் வழக்கறிஞர் கார் - சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
கோவை போத்தனூர் சாரதா மில் சாலையில் வாகனப் பதிவெண் இன்றி 'வழக்கறிஞர்' என்று மட்டும் எழுதப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய இந்த கார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.