இராமேஸ்வரம்: பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் ஈர்த்த ராமேஸ்வரம் கோவில் 3-ம் பிரகாரம்: குவியும் சுற்றுலா பயணிகள்
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களிடம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரம் குறித்து எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 1,212 தூண்களைக் கொண்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க பிரகாரத்தில் பக்தர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.