பெரம்பலூர்: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் இணைய சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.15 முதல் 18 வரை நடைபெறுகிறது. தகுதியுள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.