செங்கம்: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என மக்கள் பிடிவாதம் பிடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.