துறையூர்: அரசு மருத்துவமனை அருகே கார் மீது பைக் மோதி ஒருவர் காயம்
துறையூர் பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் துறையூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த வீரக்குமார் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து துறையூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் முகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.