அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் தொழிற்சங்கங்களின் பிரச்சார இயக்கம்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா அருகில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தினர். தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்யவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.