பாலக்கோடு: தர்மபுரி: 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாடு - தீயணைப்பு வீரர்கள் மீட்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த கறவை மாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். 50 அடி ஆழமும் 20 அடி தண்ணீரும் கொண்ட கிணற்றில் இருந்து மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.