ராதாபுரம்: மகேந்திரகிரியில் இஸ்ரோ சாதனை: 200 விநாடிகள் இயங்கிய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.-எப்19 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. 200 விநாடிகள் தொடர்ந்து இயக்கப்பட்ட இந்த என்ஜின், அடுத்தகட்டமாக என்.வி.எஸ்.-04 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப் பயன்படுத்தப்பட உள்ளது.