திண்டுக்கல் கிழக்கு: பழனி கந்தசஷ்டி விழா: சூரசம்ஹார ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
பழனி கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சூரசம்ஹாரம் நவம்பர் 15-ல் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.