பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு: கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் திரு. ப. அப்துல் ராசிக் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதிய கட்டிடப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள அவர், பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார்.