பேரணாம்பட்டு: வேலூர்: பேரணாம்பட்டு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் - 5 ஏக்கர் பயிர்கள் சேதம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து 5 ஏக்கர் பரப்பிலான வாழை மற்றும் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. வனத்துறையினர் யானைகளை விரட்டிய நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.