கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: துரை வைகோ பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.