அம்பத்தூர்: பொது இடங்களில் தீவிர ரோந்து: களத்தில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்புப் படை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.