இராமநாதபுரம்: பரோலில் வந்து தலைமறைவான ஆயுள் கைதி: அந்தமானில் பிடிபட்டார்
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அருண்பாண்டியன், பரோல் விடுப்பில் வந்து சிறைக்குத் திரும்பாமல் அந்தமானுக்குத் தப்பிச் சென்றார். அவரை ராமநாதபுரம் போலீஸார் தனிப்படை அமைத்து அந்தமானில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.