போடிநாயக்கனூர்: தேனி: போதை ஒழிப்பு விழிப்புணர்வு - 500 மாணவர்கள் செய்த சாதனை!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'NO DRUGS' வடிவில் நின்று போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மினி மாரத்தான் போட்டியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.