தூத்துக்குடி: பெரியார், அண்ணா, கலைஞர் கனவு நினைவாகிக் கொண்டி ருக்கிறது ஆட்சியரகத்தில் உணர்ச்சிவசப்பட்ட கனிமொழி எம்பி.,
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்து சட்ட கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார்.