புதுக்கோட்டை: மாணவிகளின் கல்விக்காகத் திரண்ட மக்கள்: புதுக்கோட்டையில் திடீர் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி அனைத்துக் கட்சியினர் இணைந்து போராட்டம் நடத்தினர். மாணவிகளின் சிரமங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.