பண்ருட்டி: பண்ருட்டியிலுள்ள முன்னாள் MLA சத்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது டெண்டர் விடுவதில் ₹20 லட்சம் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.