விழுப்புரம் அருகே விறுவிறுப்பாக நடைபெறும் கொலு பொம்மைகள் தயாரிப்பு!
நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் கரடிப்பாக்கத்தில் களிமண்ணால் ஆன சரஸ்வதி, துர்கை, பெருமாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வடிவங்களில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தயாரிக்கப்படும் பொம்மைகள் சென்னை, கோவை, பெங்களூருக்கு ரூ.100 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், களிமண் தட்டுப்பாட்டால் தொழில் பாதிக்கப்படுவதாகவும், அரசு உதவ வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
#Villupuram #Navaratri2026 #Dasara #Kolubommai #Karadipakkam #TamilNaduNews #LocalCrafts #TNNews #News32