காட்பாடி: வேலூர்: காரில் கடத்தப்பட்ட 250 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 6 பேர் கைது
வேலூர் மாவட்டம் பனமடங்கி பகுதியில் ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ செம்மரக்கட்டைகளை எஸ்.பி தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து காட்பாடி வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.