பாளையங்கோட்டை: HDFC வங்கிக்கு அபராதம்: பெண் ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வீட்டுக்கடன் ஆவணங்களைத் தொலைத்த HDFC வங்கிக்கு, திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை ஒப்படைக்கவும், இழப்பீடு வழங்கவும் வங்கிக்கு ஆணையம் கட்டளையிட்டுள்ளது.