செங்கம்: திருவண்ணாமலை: அரசு ஊழியர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் நவம்பர் 17-ல் நடைபெறுகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் 17.11.2026 அன்று நடைபெற உள்ளது. இதில் அலுவலகப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துதல், கோப்பு தயாரித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.