அரியலூர்: மக்கள் நீதிமன்றத்தில் 1,408 வழக்குகள் தீர்வு - ரூ.23 கோடி மதிப்பிலான தீர்ப்பு
அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,408 வழக்குகள் முடிக்கப்பட்டு, 23,29,54,911 ரூபாய் மதிப்பிலான தீர்வுகள் காணப்பட்டுள்ளன. அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில் பல்வேறு வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.