திருப்பத்தூர்: திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் பூங்காவில் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் பூங்காவில் கழிவறை பராமரிப்பின்மை, தண்ணீர் வீணாதல் மற்றும் குப்பைகள் தேக்கத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை கோரியுள்ளனர்.