புதுக்கோட்டை: குண்டும் குழியுமான சாலை - மக்கள் கடும் அவதி!
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே வெள்ளாள விடுதி ஊராட்சி கடைத்தெரு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.