விழுப்புரம் பாஜகவில் கூண்டோடு ராஜினாமா செய்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் - அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்!
தமிழக பா.ஜனதாவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவாக, விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கூடாரம் மெல்ல மெல்ல காலியாகி வருகிறது! ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத் விலகிய நிலையில், நேற்று மாவட்ட பொருளாளர் முருகன், துணைத்தலைவர்கள் குபேரன், சிலம்பரசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பா.ஜனதாவில் இருந்து அதிரடியாக விலகினர்.
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அண்ணாமலையின் பதாகைகளுடன் கோஷமிட்டபடி தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். "தற்போதைய பா.ஜனதா தலைமை உழைத்தவர்களை மதிப்பதில்லை; கட்சி வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது" என விலகிய நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்!
#Villupuram #BJP #Annamalai #PoliticalUpdates #BreakingNews #VillupuramNews #TN32NewsMedia