உத்தமபாளையம்: கம்பம்: சாலைகளில் குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, நேரில் ஆய்வு செய்த எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.