நத்தம்: வாளுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்திய இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கையில் வாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட ராசு என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.