உத்தமபாளையம்: தேனி: 10 நாட்களாக தண்ணீர் இல்லை! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் 10 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுருளி அருவி - தேனி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்கியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.