திருநெல்வேலி: நடிகை திரிஷா பாதுகாப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்!
நடிகை திரிஷாவிற்கு அளிப்பது போல் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்தும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்தும் அவர் நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.