செங்கம்: திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளர் மீது பெண் நிர்வாகிகள் கடும் அதிருப்தி
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யா, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகக் கூறி ஆரணியில் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகத்தில் உள்ள சத்யாவின் புகைப்படத்தின் மீது கரியைப் பூசி, அவருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.