பண்ருட்டி: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல இந்த கூட்டணி - பண்ருட்டி RKM மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பேச்சு
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான இந்தியா கூட்டணி கட்சிகளின் திமுக தலைமையிலான பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் RKM தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சி,தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.