பண்ருட்டி: தமிழ்குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று டைல்ஸ்க்கு அடியில் மறைந்திருந்ததை கண்டு நெல்லிக்குப்பம் பாம்புபிடி வீரர் உமர் அலிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர், அடுக்கி வைத்திருந்த டைல்ஸ்களை அப்புறப்படுத்தி உள்ளே இருந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.