பெரியகுளம்: கொட்டும் மழையிலும் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற பௌர்ணமி வழிபாடு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி மலைக்கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.