அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக அன்சுல் நாகர் பொறுப்பேற்பு!
திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக பணியாற்றிய அன்சுல் நாகர் ஐபிஎஸ், கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் அவர் தனது பணியைத் தொடங்கினார்.