திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: 15 மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கீடு!
திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் 15 மீனவர்களுக்கு குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வழங்கினார். 11.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த வாகனங்கள், மீன் விற்பனையை ஊக்குவிக்க மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.