சேலம்: சேலம் 550 கிலோ வெள்ளி கொள்ளை: தலைவன் உட்பட 5 பேர் கைது!
Salem, Salem | Oct 24, 2026 சேலத்தில் வெள்ளி பட்டறையில் 550 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.