அரியலூர்: கனிம வாகனங்களுக்கு GPS கட்டாயம் - ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப்டம்பர் 30-க்குள் AIS 140 தரத்திலான GPS பொருத்த வேண்டும். மேலும் எடைமேடை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதனை செய்யாத வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.