பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அப்துல் ராஸிக் பொறுப்பேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அப்துல் ராஸிக் இன்று பொறுப்பேற்றார். அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். பொன்னேரி சப் கலெக்டராக இருந்த இவர், தற்போது பெரம்பலூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.