ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: அதிகாரிகளை கண்டித்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் தர்ணா
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆணையாளர் தங்களை ஒருமையில் பேசியதாக திமுக உறுப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவுகிறது.