சிவகங்கை: கீழக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் உலக அறிவியல் தினம் கொண்டாட்டம்
காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.