தரங்கம்பாடி: மேலப் பெரும்பள்ளத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை எம்எல்ஏ பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மேல பெரும்பள்ளத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு அவரது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி பின்னர் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.