அரியலூர்: அரியலூர் அரசு அலுவலக வளாகத்தில் மின்கசிவு: தீயை அணைக்க ஊழியர்கள் போராட்டம்
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு பல்துறை வளாகத்தின் மின் இணைப்பு அறையில் மின்கசிவால் கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு கருவிகள் முறையாக வேலை செய்யாததால் ஊழியர்கள் சிரமப்பட்ட நிலையில், இறுதியில் தீ அணைக்கப்பட்டது. பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.